எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 26 டிசம்பர், 2009

இசையால் வசமாகா இதயம் எது-?

  • இன்றைய சூழ்நிலையில் தானுண்டு தன் வேலை உண்டு என்று பெரும்பாலோர் உள்ளனர். (அவர்களில் நானும் ஒருவன் ) இயந்திரமாக வாழும் சூழல் தானாகவே அமைகிறது. இயந்திரத்தை மகிழ்ச்சி படுத்துவது மிகவும் எளிது, அதை தினமும் கவனித்தாலே போதும். ஆனால் மனிதனுக்கு-!...இந்த வேளையில் நம் மனதிற்கும் சில மகிழ்ச்சியை கொடுத்தால் எப்படி இருக்கும்...! நன்றாக தான் இருக்கும். அந்த மகிழ்ச்சியை எப்படி அணுகுவது-? சிலருக்கு மது, சிலருக்கு மாது, பலருக்கு புகை இழுத்தல், இப்படி போகும் பொது பலருக்கு பாடல்களில் மயக்கம் உண்டு.(எனக்கு கொஞ்சம் அதிகம்) உங்களுக்கு தெரிந்து இருக்கும் படலை பற்றிய பதிவு என்று . ஆம் பாடலை பாடதவர் குறைவு . இந்த இடத்தில் பாடல் என்பது முழுக்க முழுக்க சினிமா சம்பந்த பட்டதே. சினிமாவை பற்றிய கருத்துக்களை பலர் சொல்லி இருக்கிறார்கள்,அந்த பக்கம் போக வேண்டாம். இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களின் பட்டியல் எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதுகிறேன் ... அதை தொடர்ந்து எழுதவும் முயற்சி செய்கிறேன். 1.மன்மத லீலையை வென்றார் உண்டோ ...(படம்: ஹரிதாஸ்) 2.கடல் மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் (படகோட்டி) 3.அடி ஆடி வரும் பல்லாக்கு இது சாமி வரும் தூது (ஐ லவ் இந்தியா) 4 .என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னனின் பேரும் என்னடி எனக்கு சொல்லடி (உன்னை நினச்சேன் பட்டு படிச்சேன்) 5.ஒரு பொன் மானை நாம் காண தகதிமிதோம் (மைதிலி என்னை காதலி) 6.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர ...(மௌன ராகம்) 7.ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை) 8.சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு (கோடி பறக்குது) 9 .அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே (மன்னன்) 10 .என் புருசன்தான் எனக்கு மட்டும் தான் (கோபுரங்கள் சாய்வதில்லை) அடுத்த பதிவில் தொடரலாம் என்று உள்ளேன் ... மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் *இன்னிசை பிரியன்*

2 கருத்துகள்:

  1. vaazhthukkal snjay.miga arumaiyana palaiya paadalkalai ninavupaduthiyatharkau nanri.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தை இல்லையே (கவி ராஜா) அவர்களே ... மக்கள் மனதில் மகிழ்ச்சியை விதைப்போம்...

    பதிலளிநீக்கு