எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 10 ஏப்ரல், 2013

காஃபித் தண்ணி போடட்டுமா ?



டிஸ்கி: இது  எனக்கு தெரிந்த அளவு மட்டுமே, தெரியாத தவறான விளக்கங்களுக்கு சரியான பதில் சொல்லவும்.
          
 காஃபி (Coffee): உலகில் 144 நாடுகளில் காஃபி முக்கிய பானமாக உள்ளது, தினமும் காலையில் மட்டும்  6,00,000 கப் காஃபி குடிக்கின்றனர் ( இது எந்த வருடம் எடுத்த சர்வே ? ). இத்தாலி (???) நாட்டில்  அதிக அளவு காஃபி பயிராகிறது. உலகில் பல வகை காஃபி இருந்தாலும் அதில் சில வகைகளை இன்று நாம் காண்போம்.


1. அமெரிக்கன் காஃபி (American Coffee ): இது நம்ம ஊர் ப்ளாக் காஃபி,அதிக கசப்புத்  தன்மை கொண்டது.

2.ட்ரிப் காஃபி ( Trip காபி ): இது நம்ம Fillter coffee மாடல், ஆனால் அந்த ஜக் உள்ள கொஞ்சம் வேலைப்பாடு இருக்கு, அதுனால நம்மட்ட இருந்து கொஞ்சம் வித்தியாசப்படுது.

3.பிரெஞ்ச் காஃபி ( French Coffee ): நம்ம Fillter Coffee தான். சின்னதா ஒரு ஜக் கூடவே  ஒரு presser இருக்கனும், இருந்தா அதுதான் பிரெஞ்சு காஃபி.

4.துர்கிஷ் காஃபி ( Turkish Coffee ): இதற்கு ஒரு கைப்பிடியுடன் கூடிய சில்வர் கிண்ணம் வேண்டும், அதில் 2 டீ ஸ்பூன் காஃபி தூளை போட வேண்டும், அதே அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், 3 முறை சூடேற்றி குளிர்விக்க வேண்டும்,கடைசியாக மிதமான சூட்டில் உள்ள பாலில் கலக்க வேண்டும், பின் மீண்டும் சூடேற்றினால் Turkish Coffee ரெடி.

5.எஸ்ப்ரெசொ காஃபி ( Espresso Coffee ): Machine காஃபி அதிவேக கட்டளையுடன் அதிவேக நீராவியுடன் உருவாவது இந்த காஃபி, பொதுவாக ஐரோப்பியர்களே அதிகம் குடிப்பதுண்டு . சிங்கிள் எஸ்ப்ரெசொ உடன்  65*c சூட்டுடன் creamy milk கலந்தால் அது கப்புச்சினோ ( Cappuccino ), டபுள் எஸ்ப்ரெசொ உடன் ஹாட் மில்க் கலந்தால் அது கஃபே லதே ( Cafe  Latte ). கீழே படம் பார்த்து பெயர் சொல்லவும் :)






புதன், 9 மே, 2012

குழந்தை எழுதுவது ஒரு அற்புதம்!


stay kids


"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது"
பிரான்சிஸ் பேகனின் ஒரு புகழ்வாய்ந்த பொன்மொழி இது.
எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது. ஒரு குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.
வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு இது ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.
உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
குழந்தையின் எழுதும் திறனை மேம்படுத்தல்
எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது. எழுதும் செயல்பாட்டில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.
பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.
ஊக்குவித்தல்
உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தக்கூடாது மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.
குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஷனரி(Dictionary) உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.
இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.
நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.
இடம், நேரம் முக்கியமல்ல
உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.
மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.
முறையான அணுகுமுறை
ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கவியலா அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.
தனியுரிமை பாதுகாப்பு
உங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அது மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.
விமர்சனம் தவிருங்கள்
ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
பின்பற்றுதல்
உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.
தகவல்தொடர்பை ஊக்குவித்தல்
உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.
மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.
கேட்பவற்றை எழுத வைத்தல்
உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.
பட்டியலிடும் பழக்கம்
அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.
சஞ்சிகைகள்(Journals)
சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக 2 வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.
நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. மேலே சொன்ன அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிடலாகாது
                                                                                                                          stay smile-sanjay krishna                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

சனி, 26 டிசம்பர், 2009

இசையால் வசமாகா இதயம் எது-?

  • இன்றைய சூழ்நிலையில் தானுண்டு தன் வேலை உண்டு என்று பெரும்பாலோர் உள்ளனர். (அவர்களில் நானும் ஒருவன் ) இயந்திரமாக வாழும் சூழல் தானாகவே அமைகிறது. இயந்திரத்தை மகிழ்ச்சி படுத்துவது மிகவும் எளிது, அதை தினமும் கவனித்தாலே போதும். ஆனால் மனிதனுக்கு-!...இந்த வேளையில் நம் மனதிற்கும் சில மகிழ்ச்சியை கொடுத்தால் எப்படி இருக்கும்...! நன்றாக தான் இருக்கும். அந்த மகிழ்ச்சியை எப்படி அணுகுவது-? சிலருக்கு மது, சிலருக்கு மாது, பலருக்கு புகை இழுத்தல், இப்படி போகும் பொது பலருக்கு பாடல்களில் மயக்கம் உண்டு.(எனக்கு கொஞ்சம் அதிகம்) உங்களுக்கு தெரிந்து இருக்கும் படலை பற்றிய பதிவு என்று . ஆம் பாடலை பாடதவர் குறைவு . இந்த இடத்தில் பாடல் என்பது முழுக்க முழுக்க சினிமா சம்பந்த பட்டதே. சினிமாவை பற்றிய கருத்துக்களை பலர் சொல்லி இருக்கிறார்கள்,அந்த பக்கம் போக வேண்டாம். இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்களின் பட்டியல் எதோ எனக்கு தெரிந்த அளவில் எழுதுகிறேன் ... அதை தொடர்ந்து எழுதவும் முயற்சி செய்கிறேன். 1.மன்மத லீலையை வென்றார் உண்டோ ...(படம்: ஹரிதாஸ்) 2.கடல் மேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் (படகோட்டி) 3.அடி ஆடி வரும் பல்லாக்கு இது சாமி வரும் தூது (ஐ லவ் இந்தியா) 4 .என்னை தொட்டு அள்ளி கொண்ட மன்னனின் பேரும் என்னடி எனக்கு சொல்லடி (உன்னை நினச்சேன் பட்டு படிச்சேன்) 5.ஒரு பொன் மானை நாம் காண தகதிமிதோம் (மைதிலி என்னை காதலி) 6.மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர ...(மௌன ராகம்) 7.ராசாவே உன்னை நம்பி (முதல் மரியாதை) 8.சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு (கோடி பறக்குது) 9 .அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே (மன்னன்) 10 .என் புருசன்தான் எனக்கு மட்டும் தான் (கோபுரங்கள் சாய்வதில்லை) அடுத்த பதிவில் தொடரலாம் என்று உள்ளேன் ... மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் *இன்னிசை பிரியன்*

வெள்ளி, 18 டிசம்பர், 2009

வெள்ளி கிழமை விடியும் வேலை...

நேயர்களே ...! விரோதி வருடம் மார்கழி மாதம் 3 ஆம் தேதி , டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி வெள்ளி கிழமை , காலை நன்றி கலந்த வணக்கத்தையும் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... நேயர்களே...! உங்களது கல்யாண வீடுகள் கல கலக்க வேண்டுமா... புது மனை புதுவிழா பூத்து குலுங்க வேண்டுமா... பூப்புனித நீராட்டுவிழா புன்னகை பூக்க வேண்டுமா காதணிவிழா கல கலக்க வேண்டுமா... நாடுவீர் எங்களின் வலை பதிவு எழுத்தாளர்களை ... நேயர்களே...! கலைகளிலே சிறந்தது நாட்டிய கலை, கட்டிடங்களில் சிறந்தது தஞ்சை பெரிய கோவில், மலர்களில் சிறந்து ரோஜா, மனதில் சிறந்தது மல்லிகை,குளிக்க சிறந்தது குற்றாலம் (திருநெல்வேலி மாவட்டம்) பார்க்க சிறந்தது பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்) அது போல் வலை பதிவுகளில் சிறந்தது ...? நேயர்களே...! கட்டான உடலுக்கு பட்டாடை உடுத்தி வரும் தென்னமரசிட்டு தேன்கவிதை மொட்டு , மக்கள் நாவரப்பாரட்டும் பதிவுலகின் ஹிட்டு...? அடுத்து வருவது என்னுடைய சிறுபதிவு... நன்றிவணக்கம் சிலருக்கு சில விசயம் பிடிக்கும் ... இப்போ facebook நு ஒன்னு இருக்கு அதுல யாராவது போட்டோ போட்டுட்டா போதுமப்பா ... comments குடுக்குறதுக்கு என்றே சிலர் இருப்பாங்க அதுல நானும் ஒருத்தன் என்பது வேற விசயம், அதுல பாத்திங்கன்னா, ஆண்களோட நண்பர்கள் வட்டத்தில பெண்கள் இருப்பாங்க , பெண்களோட நண்பர்கள் வட்டத்தில எல்லாமே ஆண்கள் தான் ... இவங்க பண்ற அட்டூழியம் இருக்கே...! யப்பா தாங்க முடியாது. என்னோட நண்பர்கள பாத்திங்கன்னா பாதிக்கு மேல பெண்கள் தான் . இந்த மாசம் கல்யாணம் ஏதும் நடத்த மாட்டங்க, அடுத்த மாதம் நிறைய கல்யாணம் வருது எல்லோரும் மகிழ்ச்சிய இருப்பாங்க ,நல்லது , இதுல இன்னொன்னு இருக்கு எல்லா கல்யாண போட்டோவும் facebook ல வந்துரும் ... எனக்கும் நல்ல பொழுது போகும், யாரோ நினைக்கிறாங்க இதல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு பதிலா வலைபதிவர்களுக்கு டீ வாங்கி குடுத்து பொழைக்கலாம் ...இன்னும் எழுதனும்னு நினைக்கிறேன் ஒன்னும் தோனல நாளைக்கு நல்லா யோசிச்சு ஒரு பதிவு போடுறேன் சரியா அது வரை உங்களிடமிருந்து அன்பு வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் sanjaykrishna

வியாழன், 17 டிசம்பர், 2009

காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு ...

தூது வந்த காகிதத்தை தூக்கிலிட்ட தூயவளே ...! தூது அனுப்பிய என்னை மட்டும் ... துடித்து அழவா விட்டு வைத்தாய்...? நிலவொளியில் நீரலைகள் நிர்வாணமாய் நீந்துவதை கரையில் நின்று ரசித்த கரு வேல மரம் போல... உன் வீட்டு கதவோரம் நான் நின்று உன் கட்டழகை ரசிக்க வேண்டும் ... வானத்திலிருந்து பூமி பார்க்க புறப்பட்ட சில மழை துளிகள் உன் வீட்டு மரத்தின் இலைகளிலும் கிளைகளிலும் தங்கின உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று ....

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்...

ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே...!

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ..?

வெள்ளையம்மாள் பெற்ற, வெள்ளி மலரே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறக்கும்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல,
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா.........

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்.....

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே.....

அஞ்சாறு வருஷம் ஆச்சு , உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே.....

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

இன்னும் நான்கு மாதம் போன பின்பு நான் பார்பேன் என் தெய்வத்தை அது வரை பொறுக்க வேண்டும் என் மனமே...

கடவுள் ஏன் கல்லானார் ...?


திருவரங்கம் திருமண விபத்து பற்றிய துளிகள் ... மணமேடையை பிண மேடையாக்கிய இந்த "தீ"இக்கு அனுப்பியது யார்...? "திருமண அழைப்பிதழ்" பெண்ணொருத்தி கதறினாளாம் கரிக்கட்டையாய் கருகிய தன் கணவனை பார்த்து , மிச்சமிருந்த உயிரையும் வீசி எறிந்தாலாம் கைக்குட்டையாய் கசங்கி கிடந்த தன் குழந்தையை பார்த்து ... "மொய்" எழுத 'மை' இல்லாததாலோ உதிரம் தொட்டு எழுதியது இந்த நெருப்பு "பேனா" இவ்வளவு நடந்தும் திரும்பி கூட பார்க்க வில்லை இந்த "திருவரங்கத்து பெருமாள்"