எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 10 ஏப்ரல், 2013

காஃபித் தண்ணி போடட்டுமா ?



டிஸ்கி: இது  எனக்கு தெரிந்த அளவு மட்டுமே, தெரியாத தவறான விளக்கங்களுக்கு சரியான பதில் சொல்லவும்.
          
 காஃபி (Coffee): உலகில் 144 நாடுகளில் காஃபி முக்கிய பானமாக உள்ளது, தினமும் காலையில் மட்டும்  6,00,000 கப் காஃபி குடிக்கின்றனர் ( இது எந்த வருடம் எடுத்த சர்வே ? ). இத்தாலி (???) நாட்டில்  அதிக அளவு காஃபி பயிராகிறது. உலகில் பல வகை காஃபி இருந்தாலும் அதில் சில வகைகளை இன்று நாம் காண்போம்.


1. அமெரிக்கன் காஃபி (American Coffee ): இது நம்ம ஊர் ப்ளாக் காஃபி,அதிக கசப்புத்  தன்மை கொண்டது.

2.ட்ரிப் காஃபி ( Trip காபி ): இது நம்ம Fillter coffee மாடல், ஆனால் அந்த ஜக் உள்ள கொஞ்சம் வேலைப்பாடு இருக்கு, அதுனால நம்மட்ட இருந்து கொஞ்சம் வித்தியாசப்படுது.

3.பிரெஞ்ச் காஃபி ( French Coffee ): நம்ம Fillter Coffee தான். சின்னதா ஒரு ஜக் கூடவே  ஒரு presser இருக்கனும், இருந்தா அதுதான் பிரெஞ்சு காஃபி.

4.துர்கிஷ் காஃபி ( Turkish Coffee ): இதற்கு ஒரு கைப்பிடியுடன் கூடிய சில்வர் கிண்ணம் வேண்டும், அதில் 2 டீ ஸ்பூன் காஃபி தூளை போட வேண்டும், அதே அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும், 3 முறை சூடேற்றி குளிர்விக்க வேண்டும்,கடைசியாக மிதமான சூட்டில் உள்ள பாலில் கலக்க வேண்டும், பின் மீண்டும் சூடேற்றினால் Turkish Coffee ரெடி.

5.எஸ்ப்ரெசொ காஃபி ( Espresso Coffee ): Machine காஃபி அதிவேக கட்டளையுடன் அதிவேக நீராவியுடன் உருவாவது இந்த காஃபி, பொதுவாக ஐரோப்பியர்களே அதிகம் குடிப்பதுண்டு . சிங்கிள் எஸ்ப்ரெசொ உடன்  65*c சூட்டுடன் creamy milk கலந்தால் அது கப்புச்சினோ ( Cappuccino ), டபுள் எஸ்ப்ரெசொ உடன் ஹாட் மில்க் கலந்தால் அது கஃபே லதே ( Cafe  Latte ). கீழே படம் பார்த்து பெயர் சொல்லவும் :)